கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்

நாகை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

நாகை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையைக் கடந்ததை அடுத்து தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து கிடப்பதால் வேதாரண்யம் செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 46 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சையில் தொலைபேசி சேவை முற்றிலுமாக முடங்கியது. மொத்தமாக அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸை அழைக்க முடியாதவர்கள் உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...