குன்னூர் மரணப்பாறையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

நீலகிரி : குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறையில் இருந்து தவறி விழுந்த 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறையில் இருந்து தவறி விழுந்த 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவரின் மகன் மதலை முத்து (19). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறை பகுதிக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்து மதலை முத்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வனத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணிநேரத்திற்குப் பின் உடல் மீட்கப்பட்டது. மேல் குன்னூர் காவல்துறை ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையிலான போலீசார் மதலை முத்துவின் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலையா..? தற்கொலையா..? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...