கோவை : பொன்னையராஜபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 450 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காந்திபார்க் பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள அன்னை இந்திரா நகரில் செல்லாராம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தரைதளத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 450 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையை செல்வபுரம் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். மேலும், செல்லாராம் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், குட்கா பொருட்களை கடந்த 2 மாதங்களாக விநியோகம் செய்வதும், பெங்களூரில் இருந்து கொள்முதல் செய்வதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, பொன்னையராஜபுரத்தில் சமூக விரோதிகள் பான்மசாலா குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது வாடிக்கையாக உள்ளது. ஆகவே காவல்துறையும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.