கோவை : போதைப்பொருள் வழக்குகளில் முறையாக ஆஜராகாத சிறப்பு வழக்கறிஞர் செயல்பாடு குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்பு துறை இயக்குனரை வரும் 26-ம் தேதி ஆஜராக கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பு சிறப்பு வழக்கறிஞராக ரேணுகாதேவி உள்ளார். இவர் போதைப் பொருள் வழக்குகளில் முறையாக ஆஜராவதில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் கோவை இன்றியமையா பண்டங்கள் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
அப்போது, நீதிமன்ற மாண்புகளையும், போதைப் பொருள் சிறப்பு வழக்கறிஞர் கடைபிடிப்பதில்லை எனவும், தொடர்ச்சியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞரின் செயல்பாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீசிறப்பு வழக்கறிஞரின் செயல்பாடு குறித்து வரும் 26-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு துறை இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென திபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் மீண்டும் மேல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
ஏற்கனவே, ஒரு ஹெராயின் வழக்கு விசாரணைக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததை தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு, பதில் அளிக்காமல் இருந்ததால் மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.