நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் வனப்பகுதியின் அருகே உள்ள சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், கால்நடைகளை கவனமாக மேய்ச்சலுக்கு விடவேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள மாயார் கிராம சாலைகளி்ல் கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று தனியாக சுற்றி வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து வன எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், கால்நடைளை கவனமுடன் மேய்க்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.