அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி : சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்த நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்த நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. 

சபரிமலையில் அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. 

அதேவேளையில், அந்த மனுக்கள் ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 

இந்தச் சூழலில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கேரள அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், இந்தக் கூட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. இதையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...