கோவை: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.புரம் கிழக்கு அரிமா சங்கம் இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி இன்று காலை 8.30 மணிக்கு ஆர்.எஸ்.புரம் லோட்டஸ் கண் மருத்துவமனையில் தொடங்கியது.

இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்க்கரை நோய் இந்தியாவில் மிக அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பார்வை இழப்பை ஏற்படுத்துவதில் சர்க்கரை நோய் மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. பார்வை இழப்பு ஏற்பட்டவர்களில் இருவரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சர்க்கரை நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில் சர்க்கரை நோயால் ஏற்படும் டையபடிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை நோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம் என்கிறார் லோட்டஸ் கண் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் எஸ்.கே.சுந்தரமூர்த்தி.
டயாபடிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை குறைபாடு நோய் விழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விழித்திரை பாதிப்பு முழுவதுமான பார்வை இழப்பிற்கு மிகவும் முக்கியமான காரணியாக அமைகிறது.
மங்கலான பார்வை, வண்ணங்களைக் கண்டறிவதில் சிரமம், பூச்சி பறத்தல், பார்வை குறைவு ஏற்படுதல் போன்றவை விழித்திரை குறைபாடு நோய்க்கான அறிகுறிகளாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கண் பார்வை குறித்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
இந்த விழித்திரை குறைபாடு நோய் பொதுவாக இரண்டு கண்களையும் பாதிக்கிறது. எனவே முறையான பரிசோதனைகளை தொடர்ந்து செய்தல் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் விழித்திரை குறைபாடு ஏற்படாமல் தடுக்க ஒரே வழி சிறந்த கண் மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான பரிசோதனைகளை தகுந்த கால இடைவெளியில் தொடர்ந்து செய்வது மட்டுமே.
சர்க்கரை நோய்க்கு எதிராக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி லோட்டஸ் கண் மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்பட்டது. லோட்டஸ் கண் மருத்துவமனையின் ஆப்டோமெட்ரி மாணவர்கள் சர்க்கரை கண் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி ஆர்.எஸ்.புரம் லோட்டஸ் கண் மருத்துவமனையில் துவங்கி மேட்டுப்பாளையம் சாலை, திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை வழியாக மீண்டும் லோட்டஸ் கண் மருத்துவமனையில் முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியை லோட்டஸ் கண் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் திரு எஸ் கே சுந்தரமூர்த்தி மற்றும் அம்மருத்துவமனையின் துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அரோமா குழுமங்களின் மேலாண் இயக்குனர் திரு எம் பொன்னுசாமி அவர்களும் கோவை மாவட்ட அரிமா சங்க கவர்னர் அரிமா திரு பி.கே ஆறுமுகம் அவர்களும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.