நீலகிரி: உதகையில் சின்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி குறைவான பணியாளர்களை வைத்து 'ஆமை' வேகத்தில் நடப்பதால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மலை மேலிடப் பயிற்சி மையமாக உள்ள, உதகை எச்.ஏ.டி.பி., மைதானம், தடகளம் மற்றும் கால்பந்து விளையாட்டுக்கு ஏற்றதாக உள்ளது.
இந்த மைதான ஓடுதளத்தில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான பயிற்சியை மேற்கொள்வதற்கு வசதியாக, 7 கோடி ரூபாய் செலவில் சின்தடிக் (செயற்கை இழை) ஓடு தளமாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சீதோஷண நிலை மாற்றம் மற்றும் மந்த கதியிலான பணியால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சின்தடிக் ஓடுதளம் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து மந்த கதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டினாலும், பணிகள் முழுமை பெறுவதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜென் சுசிலா கூறுகையில், ''சின்தடிக் ஓடுதளம் பணி இறுதி கட்டத்தை எட்டினாலும், வெயில் தென்பட்டால் மட்டுமே, பணிகளை முடிக்க முடியும். மழையால் ஏற்படும் காலநிலை மாற்றத்தாலும், பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், பணி முழுமை பெறுவது எப்போது என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது.'' என்றார்.