கோவை: உந்துவிசை குறைவு காரணமாக திருச்சிக்கு அனுப்பப்பட்ட மலை ரயில் எஞ்சின் பழுது நீக்கப்பட்டு மேட்டுப்பாளையம் வந்தடைந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நாள் தோறும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த மலைப்பாதையில் பல் சக்கரங்கள் மூலம் அமைக்கப்பட்ட தண்டவாளங்களில் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணித்து பிரமிக்க வைக்கும் இயற்கை அழகினை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் முன்பதிவு செய்து ரயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக அவ்வப்போது எஞ்சின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் மலை ரயில் நிறுத்தப்படும் நிகழ்வு அதிகரித்து வந்தது. இதற்கு ரயிலின் உந்து விசை மற்றும் இழுவை திறன் குறைவு என கண்டறியப்பட்டது.
இதனை அடுத்தது மலை ரயில் எஞ்சின் பழுது நீக்க திருச்சியில் உள்ள ரயில்வே பொன்மலை பணிமனைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பழுது நீக்கப்பட்ட 50 டன் எடை கொண்ட மலை ரயில் எஞ்சின் லாரி மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த மலை ரயில் எஞ்ஜினை தண்டவாள பாதையில் இறக்க ஈரோட்டில் இருந்து ராஜாளி என்ற ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு மலை ரயில் எஞ்சின் ரயில்வே ஊழியர்களால் தண்டவாளத்தில் இறக்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே மூன்று எஞ்சின் உள்ள நிலையில் தற்போது நான்காவதாக இந்த எஞ்சின் வந்துள்ளது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு எஞ்சின் தரத்தை உறுதி செய்த பின்னர் புதியதாக கொண்டுவரப்பட்ட இந்த ரயில் எஞ்சின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.