திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி உமா. இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி உமா. இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்த உமா-விற்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சுப்பிரமணி 108 ஆம்புலன்சை அழைத்து உமாவை அதில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.
இருப்பினும் உமாவிற்கு வலி அதிகமாகி குழந்தை பிறக்கும் நேரம் ஆனதால் சாதூர்யமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஐயப்பன் மற்றும் செவிலியர் உதவியாளர் சரவணதேவி இருவரும் வாகனத்தை ஓரமாக நிறுத்தினர்.

மேலும், உமா-விற்கு ஆம்புலன்சிலேயே அவர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது உமா-விற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, தாயையும், சேயையும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். சாமர்த்தியமாகச் செயல்பட்டு தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.