கோவை: கோவையில் பெண்களிடம் தொழில் தொடங்க பணம் பெற்று தருவதாகக் கூறி ரூபாய் 64 லட்சம் மோசடி செய்த வாலிபரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் அமலன்(28). இவரும் இவருடன் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா ஸ்ரீஜா (31) மற்றும் சிலர் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், ஜான் அமலன், ரேஷ்மா ஸ்ரீஜா மற்றும் சில பெண்களிடம் புதிய தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர் நிதி ரூ.25 கோடி பெற்றுத்தருவதாக கூறி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளாக ரூ.64 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்.
ஆனால், பல மாதங்களாகியும் எந்த நிதியும் பெற்று தராததால் சந்தேகம் அடைந்த ஸ்ரீஜா, ஜான் அமலனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளார்.
இதனால் ரேஷ்மா ஸ்ரீஜா கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவே ஜான் அமலனை போலீசார் கைது செய்தனர். அதேபோல அவருடன் இருந்த தில்ஷித், கிட்டு என்ற சரவணன் ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், சினிமா நடிகர் நடிகைகளை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதாகக் கூறியும், வெளிநாட்டு பணம் பெற்றுத் தருவதாக கூறியும் எத்தனை பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.