மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கஞ்சா பயிர் வளர்ப்பதை தடுக்க கோவை மாவட்ட காவல்துறை தீவிரம்

கோவை: தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மலைப்பகுதிகளில் சமூகவிரோதிகள் யாரேனும் பயிர் செய்தால் உடனடி தகவல் அளிக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை: தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மலைப்பகுதிகளில் சமூகவிரோதிகள் யாரேனும் பயிர் செய்தால் உடனடி தகவல் அளிக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது. அதேபோல போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபடுபவர்களையும் தனிப்படைகள் அமைத்தும் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மலையடிவாரங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கஞ்சா பயிரிடுவதை தடுக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.



இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் உடன் இணைந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கஞ்சா பயிர் வளர்ப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதா ? என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டது.

அதேபோல கஞ்சா பயிரிடப்பட்டு அழிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீண்டும் பயிரிடப்பட்டுள்ளதா? என்றும் கண்காணித்தனர். மலைவாழ் கிராம மக்களிடம் சமூக விரோதிகள் யாரேனும் கஞ்சா பயிர் செய்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...