கோவை: ஈச்சனாரி பகுதியில் புதிய மேம்பால பணிகள் துவங்கப்பட்டிருப்பதால் கோவை-பொள்ளாச்சி சாலை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் செல்லும் வாகனங்கள் சுந்தராபுரம்-எல்.ஐ.சி சந்திப்பு வழியாக நேராகச் சென்று ஈச்சனாரி கோவிலுக்கு முன் மதுக்கரை மார்க்கெட் ரோடு, மகாலட்சுமி ரோடு சந்திப்பில் இருந்து வலது பக்கம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோட்டை அடைந்து அங்கிருந்து இடதுபக்கம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சென்று எல்.என்.டி பைபாஸ் ரோடு வழியாக அல்லது மலுமிச்சம்பட்டி ரோடு வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
அதேபோல, பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் மலுமிச்சம்பட்டி ரோடு வழியாக அல்லது பைபாஸ் சாலை வழியாக இடது பக்கம் திரும்பி எல்.என்.டி பைபாஸ் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக பிள்ளையார்புரம் சந்திப்பு காமராஜபுரம் சந்திப்பு வழியாக சுந்தராபுரம் சந்திப்பு வந்து செல்லக்கூடிய இடங்களுக்குச் செல்லலாம்.
கனரக வாகனங்கள் மேம்பாலப் பணிகள் நடைபெறும் பொள்ளாச்சி சாலை வழியாக கண்டிப்பாக செல்லக் கூடாது. இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கோவை மாநகர காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.