கடுமையான சட்ட போராட்டங்களுக்குப் பின் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை கைதி

கோவை: சிறையில் உள்ளவர்களுக்கான கருணை அடிப்படையிலான விடுதலையில், ஆயுள் தண்டனை கைதி ஜாபர் அகமதுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக அரசு விடுதலை கொடுத்து கால தாமதித்து வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இவர் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

கோவை: சிறையில் உள்ளவர்களுக்கான கருணை அடிப்படையிலான விடுதலையில், ஆயுள் தண்டனை கைதி ஜாபர் அகமதுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக அரசு விடுதலை கொடுத்து கால தாமதித்து வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இவர் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.



கடந்த 1997-ம் ஆண்டு மதுரை சிறை சப்-ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாபர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்களில் பிணையில் வந்தார். இந்த நிலையில், 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் கைதாகி ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்தார்.

இப்படியிருக்க கடந்த 2008-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி அவர்கள் ஆயிரத்து 400 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அரசால் வெளியிடப்பட்ட அந்த கருணை அடிப்படையிலான விடுதலையில் ஜாபர் அகமதின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், சிறைத்துறை நிர்வாகம் இவரை விடுதலை செய்ய தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால் ஜாபர் அகமதின் சகோதரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

இருந்தும் விடுதலை செய்ய மறுத்து வந்தால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கைதியின் சகோதரி மனு தாக்கல் செய்தார். இதில் விடுதலைக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதி ஜாபர் அகமது இன்று கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலையானார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்து விடுதலையான இவரை இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் யூ.முகம்மது பிலால் உட்பட அவரது உறவினர்கள் அனைவரும் வரவேற்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...