கோவையில் பன்றி காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு இருவர் பலி

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் இரண்டு முதல் மூன்று பேர் வரை பன்றிக் காய்ச்சல் உட்பட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளால் மரணமடைந்து வருகின்றனர். இந்த தொடர் உயிரிழப்புகளுக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மக்கள் மத்தியில் காய்ச்சலால் ஏற்படும் மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அலாவுதீனின் மகன் நிசார் அகமது என்பவர் நேற்று மதியம் 2.25 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இவர் சுமார் 2.50 மணியளவில் உடல்நிலை மோசமானதை அடுத்து உயிரிழந்தார்.

அதேபோல, கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவற்றின் மனைவி மெச்சம்மாள் (67). இவர் கடந்த 8-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு 10.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சூழலில், காய்ச்சலினால் ஏற்படும் மரணங்களை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தீவிரமாக செயல்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...