திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சிக்கும் தனது கணவன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தனக்கும் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தனது கணவர் தன்னிடம் பிரச்சனை செய்து அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறார். இதனால், மனமுடைந்து எனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டேன். அங்கு குடிபோதையில் வந்து தன் தாயாரை அடித்து தனது கணவர் துன்புறுத்தினார். இதனால், பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, ஊர் பஞ்சாயத்தார் மூலம் சமரசம் செய்து சென்றேன்.
அதன் பிறகும் தன்னை அடித்து துன்புறுத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார். நான் எனது தாய், தந்தையிடம் கூறி இந்த பிரச்சனை சம்பந்தமாக அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரின் பேரில் நேற்று குன்னத்தூரிலுள்ள கணவர் வீட்டிற்கு மகளிர் காவலர்களுடன் சென்ற போது, சத்தியமங்கலம் உதவி கண்காணிப்பாளர் தன்னுடன் வந்த மகளிர் காவலர்களுக்கு போன் செய்து எனது உறவினர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறியதும் மகளிர் காவலர்கள் திரும்பச் சென்று விட்டனர்.
எனவே, தனக்கும் தனது குழந்தை மற்றும் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வேண்டும் மற்றும் தங்களை அடித்து துன்புறுத்திய தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.