நீலகிரி : உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர்
நீலகிரி : உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர்.

உதகையில் தொட்டபெட்டா, படகு இல்லம், செவன்த்மெயில் போன்ற சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், இதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது உதகை தாவரவியல் பூங்காவாகும். இந்த நிலையில், இன்று உதகை தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுமார் 8 ஆயிரம் பேரில், அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியோடு விளையாடி மகிழ்ந்தனர்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும், அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தருவதற்காகவும் குழந்தைகளுடன் வந்ததாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர்.