திருப்பூர் : தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், திருப்பூரில் திரையரங்கு உரிமையாளர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் 60 அடி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலு. அங்குள்ள அபிராமி திரையரங்கு உரிமையாளரான இவர், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளருமாக இருந்து வந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பாலு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.