கோவை : பருவம் தவறி பொழியும் பனிப் பொழிவினால், நோய் தாக்கம் ஏற்பட்டு கருவேப்பிலை விவசாயம் பாதிக்கப்படுவதாக மேட்டுப்பாளையம் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாழைக்கு அடுத்தபடியாக கருவேப்பிலை விவசாயம் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் புறநகர் பகுதிகளான காரமடை, தேரம்பாளையம், மருதூர், புங்கம்பாளையம், பள்ளேபாளையம் என பல்வேறு இடங்களில் சுமார் 3,000 ஏக்கருக்கு மேல் கருவேப்பிலை பயிரிடப்பட்டுள்ளது.

மூன்று மாதகால பயிரான கருவேப்பிலை ஏக்கருக்கு ஜந்து டன் வரை உற்பத்தி இருக்கும். ஆனால், தற்போது பருவம் தவறி பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கருவேப்பிலை இலையில் கரும்புள்ளி நோய் தாக்கம் ஏற்பட்டு செடிகள் சுருங்கி வருகிறது. இதனால், ஏக்கருக்கு இரண்டு டன் கருவேப்பிலை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சீசன் நன்றாக இருக்கும். குறிப்பாக, இந்த மாதங்களில் கேரள மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் அதிக அளவு வருவதால் கருவேப்பிலை விலை கிலோ ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்படும். இதன்மூலம், கூடுதல் லாபம் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
இந்த சூழலில், தற்போது பருவம் தவறி பெய்து வரும் பனிப்பொழிவால், விலை இருந்தும் உற்பத்தி குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.