கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் தினமும் கிட்டத்தட்ட வெளிநோயாளிகளாக காய்ச்சல் பாதிப்பில் 800 பேர் வரை வந்து சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனையில் இன்று பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் 45 பேரும், டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 5 பேரும், சாதாரண காய்ச்சல் பாதிப்பில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இவர்களில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி லட்சுமியும் (35) சிகிச்சை பெற்று வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார். 

இதனால், கடந்த 12-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், இவருக்கு பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமிக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் சுப்பிரமணியம் (56), ஜெகநாதன் (44) மற்றும் செல்வன் (54) ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகியிருப்பது சக நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...