வணிக வரிகளின் பிராந்திய பிரிவின் தலைமையிடமாக திருப்பூரை அறிவிக்க வலியுறுத்தல்

திருப்பூர் : தமிழக அரசு அறிவித்துள்ள வணிக வரிகளின் பிராந்திய பிரிவிற்கு திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக அறிவிக்க வேண்டும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் : தமிழக அரசு அறிவித்துள்ள வணிக வரிகளின் பிராந்திய பிரிவிற்கு திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக அறிவிக்க வேண்டும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை இணைத்து வணிக வரிகளின் புதிய பிராந்திய பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்கு ஈரோட்டை தலைமையிடமாக பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, ஈரோட்டிற்கு பதிலாக திருப்பூரை இதன் தலைமையிடமாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ. 42,000 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. இது, 2022-ம் ஆண்டு முதல் ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு, 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பங்களிப்பாகும். அதுபோக, திருப்பூர் மற்றும் பல்லடம் நூற்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் ஈரோட்டை காட்டிலும் திருப்பூரில்தான் அதிகம். 



ஆகவே, இதுபோன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை தொழில்நிறுவனங்களின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்குமாறு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வணிக வரித்துறை ஆணையர் டி.வி. சோமநாதன் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...