3 மாநிலங்களை இணைக்கும் கூடலூர் போக்குவரத்து பிரச்சினை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி : தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற 3 மாநிலங்களை இணைக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்சினை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற 3 மாநிலங்களை இணைக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்சினை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



கூடலூர் ஆர்.டி.ஓ. வளாகத்தில் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முருகையன், கூடலூர் டி.எஸ்.பி. ஜெய்சிங், தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூடலூர் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அய்யாசாமி, உதவி ஆய்வாளர் சத்தியன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார், நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

இதில், கூடலூர் பஜாரில் ராஜகோபாலபுரம் பகுதி முதல் புதிய பேருந்து நிலையம் முனீஸ்வரன் கோவில் வரை காவல்துறையின் ஆலோசனைப்படி தேசிய நெடுஞ்சாலைத் துறையால் சாலையின் நடுவே புதிதாக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரால் (சென்டர் மீடியன்) ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும், ஆட்டோ, வாடகை கார்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல போதிய இடைவெளி இல்லாததால் நகரில் உள்ள வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

போதிய அகலமில்லாத சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த தடுப்புச் சுவரை அகற்றி, தேவையான அளவு சாலையை அகலப்படுத்தி இந்த சென்டர் மீடியனை அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். 

எனினும், விபத்துகளை தடுத்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நாட்களுக்குள் இப்பகுதிகளில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் உரிய மாற்றங்கள் செய்து பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. 

மூன்று மாநில போக்குவரத்து பிரச்சினை என்பதால் இந்த சாலையை அகலப்படுத்தி நிரந்தர தீர்வினை காண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...