இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. சபாநாயகர் ஜெயசூரியாவின் அறிவிப்பின்படி, இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
இதில், தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவை தொடங்கியது முதலே உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் ராஜபக்சே ஆவேசமாக அவையிலிருந்து வெளியேறினார். இருப்பினும், கூச்சல், குழப்பத்துக்கு இடையே ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் ஜே.வி.பி கட்சி சார்பில் அளிக்கப்பட்டது.
வாக்கெடுப்புக்குப்பின் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு. ஜெயசூரியா அறிவித்தார். 225 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இதனால், ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய பிரதமரை அதிபர் சிறிசேனா விரைவில் தேர்வு செய்ய இருக்கிறார்.