கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், நெஞ்சு வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மதுரையைச் சேர்ந்த திருநாவுக்கரசின் மகன் ரவி(56). இவர் திருப்பூர் புறநகர் காவல் நிலையத்தில் கொலை, கூட்டுக்கொலை போன்ற குற்றசாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாகவே நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று சிறையில் இருந்த போது, மாலை சுமார் 4 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்க சிறை நிர்வாகத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறைவாசி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கடந்த 31.03.2006 முதல் கோவை மத்திய சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.