கோவை : உரம் செய்ய விரும்பு திட்டத்தின் கீழ் மக்கும் குப்பையை பிரித்து, அதனுடன் செல்ஃபி எடுத்து அனுப்பும் சிறந்த நபர்களுக்கு ஏராளமான பரிசுகளை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உற்பத்தியாகும் மக்கும்/மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உங்கள் வீட்டிலேயே இயற்கை உரமாக மாற்றும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அறம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்கள் உதவி புரிகின்றனர்.
அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளை (நவ.,14) முதல் தூய்மை அட்டைகள் வழங்கப்படும். டிச.,31-ம் தேதி வரை நடைமுறையில் இத்திட்டத்தில், மாணவர்கள் சமர்ப்பிக்கும் பூர்த்தி செய்யப்பட்ட தூய்மை அட்டைகளை வகுப்பாசிரியர்கள் தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்வச் பாரத் திட்ட பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் அதிக சதவீதம் குப்பைகளை தரம்பிரித்து வழங்கி முதலிடம் பிடிக்கும் ஒரு வகுப்புக்கு பரிசு வழங்கப்படும். மாநகராட்சி அரசு, தனியார் மற்றும் சர்வதேச பாடத்திட்ட வழியில் இயங்கும் பள்ளிகள் என 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவின் கீழ் முதல் 3 இடம் பிடிக்கும் பள்ளிகளுக்கு பரிசுக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பெற்றோர் தாங்கள் தயாரித்த உரத்தோடு தங்கள் செல்ஃபி எடுத்து புகைப்படத்துடன் தூய்மை அட்டை பதிவு எண் இட்டு 8190000400 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பவும். செல்ஃபி அனுப்பும் அனைத்து பெற்றோருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, தங்க பிரிவிற்கான சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில், பங்கு பெற்றும், செல்ஃபி அனுப்பாத அனைத்து பெற்றோர்களுக்கும் வெள்ளி பிரிவிற்கான சான்றிதழ் வழங்கப்படும். இத்திட்டம் நடைமுறையில் இருந்து காலத்தில் சிறந்த செல்ஃபு அனுப்பும் 2 பெற்றோருக்கு தினந்தோறும் தலா ஒரு நாணயம் வீதம் வழங்கப்படும்.