கிணத்துக்கடவு வட்டார அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் உள்பட ஒருசில பாடப்புத்தகங்கள் விநியோகம்

கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சில புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சில புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 



கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு விடுமுறைகள் முடிந்து 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் தமிழக அரசின் இலவசப் பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் இருந்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். 

குறிப்பாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மட்டும் 75 பள்ளிகளில் சுமார் 5,324 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 1,088 மாணவர்கள் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சமூக ஆர்வலர் மணி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மனு ஒன்றை அளித்தார். 

இந்த நிலையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் ஒருசில பள்ளிகளில் இன்று தமிழ் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. "மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளில் தமிழ் உள்பட ஒருசில புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாடங்களின் புத்தகங்கள் எப்போது தருவார்கள் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்," என்கிறார் சமூக ஆர்வலர் மணி.

இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் சில புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய புத்தகங்கள் இரண்டு தினங்களுக்கு வழங்கப்படும்," எனக் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...