கோவை : தமிழக அரசு சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் தொடங்கின.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் திருக்கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் 48 நாட்களுக்கு பங்கேற்கும். முகாமில் யானைகளுக்கு சத்தான உணவு மற்றும் இயற்கையான சூழல், பவானி ஆற்றில் குளியல், மருத்துவ பரிசோதனை என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு யானைகளுக்குப் புத்துணர்வு மற்றும் ஓய்வு அளிக்கப்படும்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான முகாம் இந்த மாத இறுதியில் நடைபெறும் என தெரிகிறது. அதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முகாம் நடைபெறும் இடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

யானைகளை கட்டிவைக்க ஏதுவாக தரைகளை சமன் செய்யும் பணிகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. மேலும், யானைகள் குளிப்பதற்கு ஏதுவாக கூடுதலான சவர் பாத் அமைக்கும் பணியும், படுக்க வைத்து குளிப்பாட்ட தரைதளம் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், யானைகளுக்கு உணவு, பாகன்கள் தங்கும் இடம், உணவு, கழிவறை, மின்விளக்கு போன்றவற்றுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர் நாளை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.