பா.ஜ.க. மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டணி இடையேயான பலம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆக்ரோஷமான பதில்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் பலர் ஒன்று சேருகின்றனர். அந்தளவுக்கு அது ஆபத்தான கட்சியா?’’, என்று நிருபர் கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த், “அது ஆபத்து என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால் அது ஆபத்துதானே!”, என்று கூறினார்.
நிருபர் : பா.ஜ.க., சக்தி வாய்ந்த கட்சி என நீங்கள் கூறுகிறீர்களா..?
ரஜினிகாந்த் : ஒருவருக்கு எதிராக 10 பேர் ஒன்று கூடுகிறார்கள் எனில், யார் சக்தி வாய்ந்தவர்..?. அந்த ஒரு நபரா.. அல்லது அந்த 10 பேரா...?. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நிருபர் : நீங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க இருக்கிறீர்களா..?
ரஜினிகாந்த் : பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.
நிருபர் : பிரதமர் மோடி மிகவும் சக்தி வாய்ந்தவர் எனக் கூறுகிறீர்களா..?
ரஜினிகாந்த் : (சிரித்தபடியே) ஒன்று சேரும் அந்த 10 பேர்தான்.
நிருபர் : அப்போ, அந்த 10 பேர் தான் சக்தி வாய்ந்தவர்களா..?
ரஜினிகாந்த் : பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் பலர் ஒன்று சேர்கின்றனர். அது ஆபத்து என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால் அது ஆபத்துதானே. பா.ஜ.க. ஆபத்தான கட்சியா..? இல்லையா..? என்பது குறித்து மக்கள்தான் முடிவு செய்வார்கள். சரி.. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
நிருபர் : சரி பா.ஜ.க. குறித்து ரஜினிகாந்தின் பார்வை என்ன..? ஆபத்தானதா..? இல்லையா..?
ரஜினிகாந்த் : அது என்னால் சரியாக கூற முடியாது. மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
அரசியலில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சிகள் குறித்து ஏதேனும் கருத்து தெரிவிப்பாரா..? என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில், ரஜினிகாந்த் பா.ஜ.க.விற்கு எதிரான கூட்டணியை (மஹாகட்பந்தன்) கடுமையாக தாக்கியுள்ளார் என்று தேசிய ஊடகங்களோ செய்திகள் வெளியிட்டு வருகின்றன.