திருப்பூர்: குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் கொடுமைகளை குழந்தைகளே கண்டறிந்து புகாரளிக்கும் வகையில் குழந்தைகள் தின வார விழா கொண்டாடப்படவுள்ளதாக திருப்பூரில் சைல்டு லைன் சமூக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி திருப்பூரில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் தினத்தை ஒரு வாரம் கொண்டாடுவது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய சைல்டு லைன் அமைப்பினர், "திருப்பூரில் மாதமொன்றிற்கு பெண்கள் மீதான 10 பாலியல் வழக்குகள், குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஊரகப்பகுதிகளில் பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை வெளிக்கொண்டு வர குழந்தைகள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், இந்த குழந்தைகள் தின வாரத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளோம்." என்றார்.