கோவை: இந்து முன்னணி சார்பில் கஜ பூஜை,108 அஸ்வ பூஜை, 1008 கோ பூஜை, 16 மகாயாகம் ஆகிய பூஜைகள் வரும் டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் நடைபெற உள்ளது.
கோவை: இந்து முன்னணி சார்பில் கஜ பூஜை, 108 அஸ்வ பூஜை, 1008 கோ பூஜை, 16 மகாயாகம் ஆகிய பூஜைகள் வரும் டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் நடைபெற உள்ளது.

இதன் ரத யாத்திரை துவக்க விழா கோவை காந்திபார்க் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கலந்து கொண்டார். கோ பூஜையை காமாட்சி புரி ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் மற்றும் வராக மந்திராலய பீடாதிபதி வாராகி மணிகண்டன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், "உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் வளம் பெற வேண்டியும் இந்த்க யாகம் நடக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 23-ம் தேதி கஜ பூஜை, அஸ்வ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியன நடக்க உள்ளது.தொடர்ந்து, 24-ம் தேதி 1008 நாட்டு பசுக்களை வைத்து கோ பூஜை நடக்கும். அன்று மாலை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் குடும்பத்தை சேர்ந்த 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், இதனை மக்களிடையே கொண்டு செல்ல இந்த நான்கு ரதங்களும் கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களுக்குச் செல்லும். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு செங்கல் மற்றும் பசு மாட்டின் நெய் கொடுக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதனை யாகத்தில் பயன்படுத்துவோம்.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் நாராயணி பீடம் அம்மா, சரவணம்பட்டி, பேரூர், காமாட்சி புரி ஆதீனங்களும் மத்திய மாநில மந்திரிகள் பங்கேற்பார்கள்." என்றார்.