காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் மறியல் போராட்டம் : 160 பேர் கைது

கோவை : காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.



காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மாநில தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக டாடாபாத் மத்திய அலுவலகம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) மாநில செயலாளர் மதுசூதனன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில்,"தற்போது 42,000 காலி பணியிடங்கள் உள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ள நிலையில், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தடை இல்லா மின்சாரம் கிடைக்கப் பெற பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதே போல், திருப்பூரில் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 



இதனையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...