கோவை: பண மதிப்பிழப்பு நாளை நினைவு கூறும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி பட்டாசு வெடித்த வழக்கில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட ஐந்து பேர் மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பரில் டிமானிடைசேஷன் எனப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை திடீர் என்று செய்யப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. பின்னர் புதியதாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகமானது.
இந்த நிகழ்விற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் இந்த பண மதிப்பிழப்பு மூலம் நாட்டில் பல்வேறு சீரிய முயற்சிகள் நடந்து உள்ளதாகவும், ஆகவே இந்த நாளை நினைவு கூறும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்க உள்ளதாகவும் அறிவித்தனர்.
அதன்படி 2016-ம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணி அளவில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். இதைத்தொடர்ந்து கோவை பந்தய சாலை போலீசார் பொது இடத்தில் பட்டாசு வெடித்ததற்காக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாவட்ட செயலாளர் தேவ கோவிந்தராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றில் ஆஜராகியுள்ளனர்.