சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் ஐந்து கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும்-பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை இந்திய வானிலை மையம், "கஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது. சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15-ம் தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன்-கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது." என்று தெரிவித்துள்ளது.