கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஐந்து ஆண்டு சிறை

கோவை: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார்.

கோவை: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார்.

பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50) இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். பகலில் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடைக்கு மிட்டாய் வாங்க வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி கடையின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமி மிட்டாய் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது செல்வராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது குழந்தைகள் பாலியல் தாக்குதல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சரோஜினி ஆஜராகினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...