கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

கோவை: கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.



இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் ஜே.பி.ஆர் ஈமு கோழி நிறுவனத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்தனர்.

நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவை, திருப்பூர், ஈரோடு, பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர். இந்நிலையில் ரூபாய் ஒரு கோடியே 66 லட்சத்தை ஈமு கோழி நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக பணம் செலுத்தியவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், ராஜேஸ்வரன், பத்மநாபன், ஆகியோரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது கடந்த ஒரு ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதி பாபு தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை தீவிரமாக தேடிய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...