பல்லடம் அருகே லாரி மோதி சிறுமி பலி.., காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

கோவை: பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையம் செக்போஸ்ட்டில் திருப்பூர் சாலையிலிருந்து பல்லடம் நோக்கிச் சென்ற மொபட் மீது, கரூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.



இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பதிமூன்று வயது சிறுமி சம்பவ இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

அப்போது அந்த வழியாக வந்த பல்லடம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் காயமடைந்த மூன்று பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.



இதனிடையே சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் விபத்தில் பலியான சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்லடம் அருகே கரடிவாவியைச் சேர்ந்த ராமசாமி (65) தனது மனைவி பழனியம்மாள் (60) மற்றும் பேத்திகள் நளினி (13) மற்றும் தாமிரபரணி (8) ஆகியோருடன் கரைப்புதூரில் உள்ள தங்களது மகன் சரவணக்குமார் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இன்று காலை கரடிவாவிக்குத் திருப்பும்போது விபத்தில் சிக்கிய விபரம் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...