கோவையில் பெட்ரோல் பங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கோவை: உக்கடம்-பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த குனியமுத்தூரை சேர்ந்த பீர் முகமது என்பவரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: உக்கடம்-பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த குனியமுத்தூரை சேர்ந்த பீர் முகமது என்பவரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.



குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பீர் முகமது (36). இவர் உக்கடம்-பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

ஊழியர் பணம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டினார். ஊழியர்கள் அவரை கண்டித்தனர். இதனால் ஆவேசமடைந்த பீர் முகமது நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் வெடிகுண்டு வைத்து இந்த பெட்ரோல் பங்கை தகர்த்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஊழியர்கள் பங்க் உரிமையாளர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் முருகேசன் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமது-வை கைது செய்தனர். பீர் முகமது மீது ஏற்கனவே இது போல 3 வழக்குகள் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் ஜூலை மாதம் மீண்டும் ஒருமுறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான அவர் ஏற்கனவே கடந்த ஆண்டும் இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வழக்கு உள்ளது.

தற்போது 4-வது முறையாக பீர் முகமது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...