கோவையில் ஆன்லைன் மூலம் ரூ. 8 லட்சம் மோசடி : வர்த்தக நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

கோவை : போத்தனூரில் ஆன்லைன் மூலமாக அரிசி வர்த்தகம் செய்து ரூ. 8 லட்சம் மோசடி செய்த வர்த்தக நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : போத்தனூரில் ஆன்லைன் மூலமாக அரிசி வர்த்தகம் செய்து ரூ. 8 லட்சம் மோசடி செய்த வர்த்தக நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் அஷ்ரப் (31). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து 20 டன் அரிசி கொள்முதல் செய்துள்ளார். ரூ. 2 லட்சம் ரொக்கமும் மீதமுள்ள ரூ. 8 லட்சத்து 8 ஆயிரத்துக்கு காசோலையும் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, அரிசி அனுப்பிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளரான போத்தனூரை சேர்ந்த கௌதம் (22), அஷ்ரப்பின் நிறுவனத்திற்கு நேரில் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், அஷ்ரப் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் அப்துல் சாலிக் (37), ஜான் பாஷா (32) ஆகியோர் கௌதமை மிரட்டியுள்ளனர்.



பின்னர், இந்த மோசடி தொடர்பாக கௌதம், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், அஷ்ரப் உள்பட 3 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...