நீலகிரி : கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை உதகையில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி : கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை உதகையில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகளான நோய் எதிர்ப்பு சக்தி, மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம், நரம்பு தளர்ச்சி மற்றும் கை, கால் நடுக்கம், பசியின்மை ஏற்படும், நினைவாற்றல் குறையும், கண்பார்வை பறிபோகும், ஜீரண சக்தி குறையும், மலட்டு தன்மையை உண்டாக்கும், குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்படும், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் உறவுகள் பறிபோகும் உள்ளிட்ட பல்வேறு தீமைகள் எடுத்துரைக்கப்பட்டது.
எனவே, இதுபோன்ற பல தீமைகளில் இருந்து விடுபட கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், இதுகுறித்து தெருக்கூத்து நாடகமும் நடத்தப்பட்டது.