2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக இளைஞர்களை ஏமாற்றிவிட்டார் பிரதமர் மோடி : குஜராத் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

கோவை : நாட்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி கொடுத்து, இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக குஜராத் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : நாட்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி கொடுத்து, இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக குஜராத் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளார். 

குஜராத்தைச் சேர்ந்த தலீத் சமூக ஆர்வலரும், சுயேட்சை எம்.எல்.ஏ.,வுமான ஜிக்னேஷ் மேவானி, சமூக நீதி கட்சியின் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு, தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. 



அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது :- டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. பா.ஜ.க., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியின் கைப் பொம்மையாக தமிழக அரசு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக தற்போதைய ஆட்சியர்கள் இருப்பது, தமிழகத்திற்கு நல்லதல்ல.

சேலத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் அமைதி காத்து வருகிறார். ஆனால், நாய் கொலை செய்யப்படுவதற்கு டுவிட்டரில் நமது பாரத பிரதமர் கண்டத்தை பதிவு செய்கிறார். அதேபோல, சர்கார் படக் காட்சிகளுக்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த சிறுமியின் கொடூர கொலையை கவனத்தில் எடுக்கக் கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, எஸ்.சி., எஸ்.டி. இன மக்களை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். 

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்த வரும் நிலையில், ரூ.3,000 கோடியில் ஒற்றுமையின் சிலை கட்டியது கண்டனத்திற்குரியது. மேலும், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க.,விற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...