பத்திரிக்கையாளர்களை திணற வைத்த 'எந்த ஏழு பேரு'...! : 25 ஆண்டுகால வரலாற்றை மறந்தாரா சூப்பர் ஸ்டார்

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பதிலால் பத்திரிக்கையாளர்கள் அதிர்ந்து போயினர்.


சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பதிலால் பத்திரிக்கையாளர்கள் அதிர்ந்து போயினர்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கப்போவதாகக் கூறி வருகிறார். முன்னதாக, தன் ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அதில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். `எந்திரன் 2-ம் பாகம்’, `பேட்ட' போன்ற படங்களிலும், மறுபுறம் தன் அரசியல் தொடர்பான வேளைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, செய்தியாளர்கள் சந்திப்பு என அடுத்தடுத்த தனது கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நடிகர் ரஜினி காந்த் சந்தித்தார். அப்போது, '7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதே... உங்கள் கருத்து..?' என செய்தியாளர்கள் அவரிடத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு, ரஜினியின் பதில் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரஜினி கூறுகையில், "எந்த 7 பேர். இந்த விஷயத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் நான் வருகிறேன்.’’ இவ்வாறு அவர் கூறினார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்ட ராஜீவ் காந்தி வழக்கை தமிழக அரசியல் தலைவர்கள் சிலர், துருப்புசீட்டாக வைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் பேசி, புயலை கிளப்பினர். ஆனால், விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, வருங்காலத்தில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றுவார் என பெரிதும் நம்பப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தோ, இவ்வாறான பதிலை அளித்து, இன்னும் கத்துக்குட்டி தான் என்பதை வெளிக்காட்டியுள்ளார். 

இவரது அரசியல் வருகையை கிண்டலடித்துப் பேசும் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள், இது சினிமா அல்ல....! அரசியல்...!  என ரஜினியை சீண்டி வரும் நிலையில், தற்போதைய அவரது கருத்தை நகைச்சுவையாகப் பேசி வருகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...