நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபுவுக்கு மாவட்ட நீதிபதி பி.வடமலை பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபுவுக்கு மாவட்ட நீதிபதி பி.வடமலை பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் பங்களா மற்றும் தேயிலை எஸ்டேட்டின் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிபதி பி.வடமலை விசாரணை மேற்கொண்டார். அப்போது, வழக்கில் ஆஜராகாத தீபுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும், வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அன்று தீபுவை ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டார்.