ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு பயனாளிகளுக்கு 250 செயற்கை கால்கள் விநியோகம்

கோவை : ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயற்கை கால் மையத்தில் 250 செயற்கை கால்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.

கோவை : ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயற்கை கால் மையத்தில் 250 செயற்கை கால்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.

ஆர்.டி.ஐ. வீக் (ரவுண்ட் டேபிள் இந்தியா வாரம் குறித்து ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய செயலர் அக்சய் துகர், ரவுண்ட் டேபிள் இந்தியா ஏரியா தலைவர் அஷ்வின் குமார், ரவுண்ட் டேபிள் இந்தியா வார ஒருங்கிணைப்பாளர்கள் அபிமன்யு செந்தில், சித்தார்த், ஸ்ரீஹரி ஆகியோர் கூறியதாவது :- ரவுண்ட் டேபிள் இன்டியா 1961-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட வாரத்தை கொண்டாட நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிளைகளில் பல்வேறு சமூக சேவையை தொடங்கியுள்ளது. 

ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட காரணங்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. 23 நகரங்களில் உள்ள கிளைகளில் இந்த 7 வகையான திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, குன்னுார், ஊட்டி, பொள்ளாச்சி, கரூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணனுார், வயநாடு உள்ளிட்ட நகரங்களில் இது தொடங்கப்படுகிறது. இந்த நகரங்களில் கீழ் கண்ட திட்டங்கள் இந்த வாரத்தில் தொடங்குகின்றன.




செயற்கை கால் விநியோகத் திட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செயற்கை கால் மையத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பயனாளிகளுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை மகளிர் வட்டம் 16 துவக்கிய இந்த மையம், ரவுண்ட் டேபிள் இண்டியாவின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மக்களின் பயனுக்காக இது செயல்பட்டு வருகிறது. தேசிய செயற்கை கால் நாளை முன்னிட்டு 250 செயற்கை கால்கள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளன.




விஷன் எப்.டி.இ. திட்டம் :

பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டும் திட்டத்திற்கும் அப்பாற்பட்டு எப்.டி.இ. பிளஸ் என்ற சமூகநல சேவை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கண் பரிசோதனைகளை செய்து, புதிய கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் கோவை, திருப்பூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சங்கரா கண் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஒன்பது மாதங்களில் 5,000 மாணவர்களுக்கு முதல்கட்ட திட்டம் நடத்தப்படவுள்ளது

.

கல்வி வழியில் விடுதலை - புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டம்:

சின்ன தடாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இரண்டு பால்வாடிகள், அசோகபுரத்தில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வகுப்பறைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...