கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 475 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டம் தாமஸ் வீதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 475 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை : கோவை மாவட்டம் தாமஸ் வீதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 475 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாமஸ் வீதியை அடுத்த பொறிக்கார சந்து பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். 



அதில், அப்பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாகாராம் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 475 கிலோ எடையிலான பான்பராக்,குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான வாகராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தனது பொருட்கள் இல்லை என்றும், குடோனை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் வாகராம் தெரிவித்துள்ளார். ஆனால், வாகாராம் மீது ஏற்கனவே குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து இதேபோல பதுக்கலில் ஈடுபட்டு வரும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...