திருப்பூர் : திருப்பூர் அருகே பால் சொசைட்டி திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

காங்கயம் சம்பந்தபாளையம், தாளகரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பால் சேகரிப்பு மையங்கள் உள்ளன. இங்கு ஒரேயொரு பால் உற்பத்தியாளர் மட்டுமே உள்ள நிலையில், தேவைப்படுவோர் சடையம்பாளையம் சங்கத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனிடையே, வெளியூரைச் சேர்ந்த நபர்கள் சிலர் இப்பகுதியில் பால் சேகரிப்பு மையம் தொடங்கப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாளகரை பகுதியைச் சேர்ந்த சம்பந்தமில்லாத நபர்கள் பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்குவதை உடனடியாக நிறுத்தக் கோரி உள்ளூர் விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.