சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலையை சீரமைக்கக் கோரி மனு

கோவை : சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மனு அளித்துள்ளனர்.


கோவை : சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மனு அளித்துள்ளனர். 

இந்திய தேசிய காங்கிரஸ் கோவை மாநகர் மாவட்டம் 65-வது வார்டு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும், இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். செளரிபாளையம் வழியாக செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் சுமார் 3 கி.மீ. சுற்றி வரவேண்டிய சூழலே உள்ளது. 

எனவே, 15 நாட்களுக்குள் இப்பணியை நிறைவு செய்து தர வேண்டும். அவ்வாறு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...