அவ்னி பெண் புலி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு: கோவையில் விழிப்புணர்வு ஊர்வலம்

கோவை: மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் பகுதியில் 13 பேரை கொன்ற பெண் புலி (அவ்னி) கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் பகுதியில் 13 பேரை கொன்ற பெண் புலி (அவ்னி) கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இந்த நிலையில், பெண் புலி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், புலிகள் அவசத்தை உணர்த்தும் வகையிலும் கோவையில் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். 



ஹியுமன் அனிமல் சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 25 பேர் நேற்று கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே கூடி புலி கொல்லப்பட்டதற்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.



மேலும், புலிகள் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "தொழிற்சாலை அமைவதற்காக வனப்பகுதியை அழித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இது போன்று தொடர்ந்து நமது தேசிய விலங்கு கொல்லப்பட்டு வந்தால் அது நமக்கு பேராபத்தாக முடியும்." என்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...