நீலகிரி: குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் இருவேறு ராணுவ பிரிவுகள் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நீலகிரி: குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் இருவேறு ராணுவ பிரிவுகள் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ராணுவத்தின் இருபத்தி எட்டாவது டிபன்ஸ் மையமானது கடந்த 1956-ம் ஆண்டு ஹைதராபாத் மெட்ராஸ் ரெஜிமெண்டின் 16-வது பிரிவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வந்தது. அதன்பிறகு இன்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜு சோப்ரா மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் கர்னல் லெப்டினன்ட் ஜெனரல் ஏபிசிங் ஆகியோர் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இருபத்தி எட்டாவது கமாண்டிங் அதிகாரி மற்றும் இதர ராணுவ அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த இரு பிரிவின் இணைப்பு மூலம் இராணுவ மையங்களில் உறவை பலப்படுத்த முடியும் என்றும், ராணுவப் பயிற்சிகளை பரிமாறிக்கொள்ளவும், ராணுவ அறிவுரைகள் மற்றும் பிற தகவல்களையும் புரிந்து கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் களரி சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.