கோவை: கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களான வரப்பாளையம், குருடம்பாளையம், தடாகம், சின்ன தடாகம், சோமையனூர் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயப்பயிர்கள் பெரும் சேதமாகி வருகின்றன.

யானைப்பசிக்கு தினசரி தென்னை, வாழை, கரும்பு, சோளம் என அனைத்தும் இரையாகி வருவதால் இப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனையடுத்து இப்பகுதிகளில் தொடர் இழப்பை ஏற்படுத்தி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட சாடிவயல் வனத்துறை முகாமில் இருந்து ஜான், சேரன் என இரண்டு கும்கி யானைகள் பொன்னூத்து மலையின் அடிவாரத்தில் உள்ள வரப்பாளையம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
அதன் மூலம் காட்டு யானைகளை விரட்டும் முயற்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதற்கு எந்த பலனும் கிட்டாத நிலையில் நேற்று கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் தாமோதரசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த எழுபத்தி நான்கு தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.

மேலும், நூற்றுக்கணக்கான வாழை மரங்களும், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க விவசாய தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த பரன்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இப்பகுதி விவசாயிகள் கும்கி யானைகளின் வருகையால் தங்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
கும்கிகளை கொண்டு ஊரை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்டுவதில் எவ்வித பலனுமில்லை, தொடர்ந்து ஊருக்குள் ஊடுருவும் யானைகளை கண்டறிந்து அவற்றை வேறு வனப்பகுதிக்கு அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நீலகிரி மாவட்டம் தெப்பகாடு முகாமில் இருந்து விஜய், பொம்மன் என மேலும் இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு வரவழைக்கபட்டுள்ளன. இவற்றோடு சேர்த்து இனி நான்கு கும்கி யானைகள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்பதால் மிக விரைவில் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும்." என்றனர்.