திருப்பூர்: கால்நடைத்துறை மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வர உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதியில் சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, ஏரிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.1 கோடியே 64 இலட்சம் ஒதுக்கீடு செய்து திட்டங்களைத் துவக்கி வைத்தார்.

இந்த திட்டங்கள் அனைத்தும் மிக விரைவில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கால்நடை துறை சார்பில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 818 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடை உதவியாளர்கள் பணிக்கு 1200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வுகள் நடத்தப்பட்டு விரைவில் உதவியாளர் பணிகளும் நிரப்பப்பட உள்ளதான. கால்நடைத்துறை மருந்துகள் விரைவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும்." என்றார்.